தரமும், மேம்பட்ட தொழில்நுட்பமும் கியாரண்டி! RGU தலைவர் உறுதி!

கோவை: தரமான கல்வி, தொழில்நுட்பம், தொழில் முனைவோர் வளர்ச்சி என சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட உள்ளதாக, ரத்தினம் குளோபல் பல்கலைக்கழகமாக (RGU) தரம் உயர்ந்துள்ள ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் ஏ. செந்தில் உறுதியளித்துள்ளார்.

Advertisement

கோவை ரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், ரத்தினம் குளோபல் பல்கலைக்கழகமாக (RGU) என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகமாக தரம் உயர்ந்துள்ளது. இதற்கான தொடக்க விழா ரத்தினம் கிராண்ட் ஹால் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்வியாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவரும், RGU வேந்தருமான மதன் ஏ. செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

Advertisement

UGC 2023 விதிமுறைகளின் கீழ் “Deemed to be University” அந்தஸ்தைப் பெற்ற கல்வி நிறுவனமாக ரத்தினம் குளோபல் பல்கலைக்கழகம் அறிமுகமாகியுள்ளது.

ரத்தினம் குளோபல் பல்கலைக்கழகம், கல்வி, தொழில்நுட்பம், தொழில் முனைவோர் வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதிய கல்விச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.

Advertisement

இந்த கல்வி நிறுவனங்கள் நீண்ட ஆண்டுகளாக கல்வித்துறையில் சேவையாற்றி வரும் நிலையில், தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உள்ளோம்.

குறிப்பாக எதிர்கால தலைமுறைக்கான புதுமையான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த பல்கலைக்கழகம் செயல்படும்.

இந்த சந்திப்பின் போது ரத்தினம் கல்விக் குழுமங்களின் சி.இ.ஓ. மாணிக்கம், சி.பி.ஓ. நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...