சூலூர் சிறுமி வழக்கு- கைதானவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்…

கோவை: சூலூர் சிறுமி வழக்கில் கைதான இருவரிடமும் குற்ற பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டுள்ளது.

கோவை சூலூர் அருகே 10வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

Advertisement

கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் அவருடன் இருந்த மோகன்ராஜ் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

இருவர் மீதும் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணை அடிப்படையில் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தயார் செயப்பட்டு நேற்று இ ஃபைலிங் முறையில் கோவை உள்ள போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த குற்றப்பத்திரிக்கை நகல் கைது செய்யப்பட்ட இருவருக்கும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதற்காக இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு பின்னர் மீண்டும் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...