மூத்த கவிஞர் புவியரசு அவர்களுக்கு தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் அஞ்சலி

கோவை : சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த கவிஞர் புவியரசு அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் குறிப்பிட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி அஞ்சலியில் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் மரியாதை செலுத்தினார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் புவியரசு அவர்கள் ஆற்றிய அரிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது படைப்புகள் வருங்கால தலைமுறைக்கும் ஊக்கமளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Kanimozhi Santhosh pays tribute

மேலும், புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, புவியரசு அவர்களின் புகழும், இலக்கியப் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என்று கனிமொழி சந்தோஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.