புதிதாக வீடு கட்டுபவர்களுக்காகவே கோவையில் துவங்கப்பட்ட இன்டெக் கண்காட்சி…

கோவை: புதிதாக வீடு கட்டுபவர்கள் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பில்ட் இன்டெக் கண்காட்சி துவங்க உள்ளது.

Advertisement

கட்டுமானம் சார்ந்து அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் பில்ட் இன்டெக் கண்காட்சி கோவையில் துவங்கி உள்ளது.

கோவை கொடிசியா வளாகத்தில் கட்டுமானம் துறையின் சார்பில் இன்று முதல் 9ம் தேதி வரை பில்ட் இன்டெக் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள கட்டுமானம் சார்ந்த நிறுவனங்கள் அவர்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

கட்டுமானத்திற்கு தேவைப்படும் செங்கல் சிமெண்ட் உட்பட மரக் கதவுகள், இரும்பு கதவுகள், வீட்டின் வடிவமைப்பு டிசைன்கள், படிக்கட்டுகள், டைல்ஸ், நவீன மையமான குளிலறை மற்றும் கழிவறை சாதனங்கள், பல்வேறு வகையான சிண்டெக்ஸ் தொட்டிகள், பைப் வகைகள்

Advertisement

நீச்சல் குளம், குடிநீர் சுத்திகரிப்பான், கட்டுமானத்திற்கு பயன்படும் உபகரணங்கள், சிசிடிவி கேமராக்கள், பெரிய பெரிய நிறுவனங்கள் கல்லூரிகள் மருத்துவமனைக்கு பயன்படும் வகையிலான குடிநீர் சுத்திகரிப்புகள், ஹோட்டலுக்கு தேவையான முழு சமையலறை வடிவமைப்பு மாதிரிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில நிறுவனங்கள் பிரத்தியேக அனுபவ வீட்டையும் அமைத்துள்ளனர்.
இந்த கண்காட்சியானது காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சியை காண வரும் பொதுமக்கள் செல்போன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளலாம். நகர பேருந்துகளில் வரும் பொது மக்களுக்கு அவிநாசி பிரதான சாலை முதல் கொடிசியா அரங்கு வரை இலவச பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...