கோவை: கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
புலியகுளம் தாமு நகரைச் சேர்ந்தவர் 41 வயது நபர். இவர் சம்பவத்தன்று மதியம் சரவணம்பட்டியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், தன்னிடம் அழகான பெண் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அடுக்குமாடிக் குடியிருப்பில் விபசாரம் செய்வது தெரியவந்தது.
சக்தி சாலை
தொடர்ந்து அந்த வாலிபரை சரவணம்பட்டி சக்தி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய தூத்துக்குடியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பிடித்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விபசாரத்திற்கு அழைத்த புரோக்கர் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் (26) மற்றும் அந்த பெண்ணைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அங்கிருந்து தப்பியோடிய மற்றொரு பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

