கோவை: கோவையில் முதன்முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட், மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவை பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் வேகமாக முன்னேறி வருகிறது. தொழில் வளர்ச்சியும் கல்வி நிறுவனங்களின் அதிகரிப்பும் காரணமாக மக்கள் தொகையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் கோவையில் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூலூர் பேரூராட்சி மற்றும் எல்.ஜி மருத்துவமனை இணைந்து சூலூர் பேருந்து நிலையம் அருகே குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைத்துள்ளன.
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏசி பஸ் ஸ்டாண்ட், கோவையிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிலையமாக அமைந்துள்ளது.
வீடியோ காட்சிகள்
https://www.youtube.com/shorts/7h5kCjv86ng
பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் இந்த குளுகுளு ஏசி பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து காத்திருந்து, தங்களுக்குரிய பேருந்து வந்ததும் ஏறி சுலபமாக புறப்பட்டுச் செல்லலாம் என அங்கு இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.


தொழிலில் மட்டும் இரண்டாம் இடம் அல்ல கோயம்புத்தூர், கஞ்சா புழக்கத்தில் நம்பர் ஒன் கோயம்புத்தூர் போதை பழக்கத்தில் நம்பர் ஒன் கோயம்புத்தூர்