எரிபொருள் நுகர்வு- கோவையில் ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்…

கோவை: எரிபொருள் நுகர்வு தொடர்பாக என்னை நிறுவன அதிகாரிகள் ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள் ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வு தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள், தனியார் ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள், பேக்கரி உரிமையாளர் சங்கங்கள். தனியார் விடுதிகள் நல சங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினரால் நடத்தப்படும் விடுதிகள் நல சங்கங்கள் ஆகியோருடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் மதிமதுரா மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன். தனியார் மருத்துவமனை, பேக்கரி, ஹோட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றின் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தற்போதைய எரிவாயு இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. உணவகங்கள், விடுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு மாற்று ஏற்பாடாக மின் சாதனங்களை பயன்படுத்த உரிய ஏற்பாடுகள் செய்யுமாறும் அதனால் மின்மாற்றியில் ஏற்படும் மின்சுமை தொடர்பாக ஏற்படும் குறைகள் தொடர்பாக மின் வாரிய அலுவலக எண் 9445851651-ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

பொதுமக்கள் தங்களிடம் உள்ள சமையல் எரிவாயு அரசு விதிகளுக்கு மாறாக தனியார் எரிவாயு நிரப்பும் உருளைகளை நிலையங்களில் நிரப்பக்கூடாது எனவும் அதனால் விபத்துக்கள் ஏற்பட மிக வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கவோ மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யவோ கூடாது. மீறினால் அரசு விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இது தொடர்பான புகார்களை 9865123446 மற்றும் 9498174273 என்ற குடிமைபொருள் மற்றும் குற்றப்புலனாய்வு காவல்துறை அலுவலக எண்ணிற்கு அளிக்கலாம். எரிவாயு தொடர்பான புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2300569-ஐ அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...