கோவை: தேர்தல் நடத்தை விதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல்-2026 முன்னிட்டு விரைவில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட உள்ளதால், அக்காலத்தில் அனைத்து வகை தொழில் செய்யும் வியாபாரிக்களும் எவ்வித இடையூறும் இன்றி வணிகம் செய்யும் பொருட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் பல்வேறு வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோனைக்கூட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மருத்துவர் பிரசாந்த், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில் பல்வேறு சங்கங்கள் தொழில் நிமித்தமாக நிதியினை கொண்டு செல்லும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள், நகை உற்பத்தியாளர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள், ஓட்டல் உரிமையாளர்கள் அரசியல் கட்சிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொட்டலங்கள் குறித்த கணக்கினை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

