விஜய்க்கு சிபிஐ நெருக்கடியா? செங்கோட்டையன் பேட்டி

கோவை: விஜய்க்கு சிபிஐ நெருக்கடி கொடுத்ததா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறுகையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் த.வெ.க தலைவர் விஜய் உரிய பதிலை அளித்து உள்ளார் என்றார்.

முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டுவிட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்து உள்ளார் என்றும் தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருவது, தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று என்பதை காட்டுகிறது என்றார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல, பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது என்றும் குற்றம் சாட்டினார்., தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர் என்றும் மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது என்றார்.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் த.வெ.க கட்சியில் உள்ளனர் என்றும் த.வெ.க மற்றும் என்.டி.ஏ கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாறவில்லை என்று தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, விஜய் முதலமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார் என்று துணை முதல்வர் ஆவதற்கு அல்ல என சுட்டிக்காட்டினார்.

விஜய்க்கு சிபிஐ நெருக்கடி கொடுத்ததா என்ற கேள்விக்கு, “நேற்று விஜய் அங்கே அழைக்கப்பட்டார். அங்கு உரிய பதிலைக்கொடுத்தார். முதல்வர் என்பதற்காகவே உச்சத்தை விட்டு அரசியலுக்கு வந்தார்” என்று கூறிச் சென்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை…

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. நேற்று அதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மாநிலம்...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.