விஜய்க்கு நான் பாட்டு பாட மாட்டேன்… ஒரே போடா போட்ட கானா வினோத்!

விஜய் சாரே வந்து கேட்டாலும் அவருக்கு நான் பாட்டு பாட மாட்டேன் என கானா வினோத் ஓபனாக பேசியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ள ஒரு கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாடகர் கானா வினோத் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் குறித்து கூறிய கருத்து, அவரது ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

Read also ஒரே மாதிரி உடை… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் – திரிஷா..!

கடந்த 9 ஆண்டுகளாக மக்கள் மனதில் தனித்த இடத்தைப் பிடித்திருந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, அதன் 9வது சீசனை ஜனவரி மாதத்தில் நிறைவு செய்தது. இந்த சீசனில் பல எதிர்பார்ப்புகளை தாண்டி, போட்டியாளர் திவ்யா டைட்டிலை கைப்பற்றினார். அதே நேரத்தில், மக்கள் ஆதரவை அதிகமாக பெற்றிருந்த கானா வினோத் இறுதி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணப்பெட்டியுடன் அவர் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

Advertisement
Gana Vinoth

கானா வினோத்துக்கு தற்போது சினிமாவில் வாய்ப்புகள் கொட்டி வருகிறது. . இதன் நடுவே, அவர் அளித்து வரும் பேட்டிகளில் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து திறந்தவெளியாக கருத்து தெரிவித்து வருவது, ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் மீண்டும் அவர் விஜய் குறித்து பேசியது ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது. அவர் கூறியதாவது, நான் விஜய் சாரின் தமிழக வெற்றிக் கழகத்துக்காக பாட்டு பாடவே மாட்டேன், ஏன் விஜய் சாரே வந்து கேட்டாலும் பாட மாட்டேன்.

Advertisement

Read also கட்டிப்பிடித்து போட்ட போட்டோ.. தலைப்பு செய்தியாக மாறிய திரிஷா!

Vinoth Criticized Vijay

அதற்கு காரணம், நான் ஒரு பொது ஆள் என்பதால் கட்சிக்காக பாட்டு பாடமாட்டேன், ஒரு வேளை விஜய் சாரின் படத்துக்கு பாடச் சொன்னால் நான் நிச்சயம் பாடுவேன் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பலரும் கானா வினோத்துக்கு எதிராக கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். சிலர் அவரது கருத்தை ஆதரித்தாலும், பலர் அதை மரியாதைக்குறைவாகக் கருதி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தற்போது ரசிகர்கள் வட்டாரத்திலேயே அல்லாமல், சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Flipkart Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

ஓடிடியில் சுதந்திர தின வருகையாக வரும் ‘பாரத் பாக்ய விதாத்தா’! வரிசை கட்டி நிற்கும் 9 படங்கள்…!

கடந்த இரு தினங்களில் வெளியான மற்றும் அடுத்த வாரம் வெளியாக உள்ள OTT படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த முக்கிய தகவல்கள் ரசிகர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.