துணையை காப்பாற்ற சண்டை போட்ட GENTLEMAN.. பற்ற வைத்த திரிஷா!

பரபரப்பை கிளப்பியிருக்கும் நடிகை திரிஷாவின் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ்க்கு நெட்டிசன்கள் சரமாரி கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

நடிகை திரிஷா குறித்து மீண்டும் சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது. 42 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல், முழு நேர கவனத்தையும் சினிமா பயணத்திற்கே செலுத்தி வரும் அவர், தொடர்ந்து முன்னணி நடிகையாக தன்னுடைய இடத்தை நிலைநிறுத்தி வருகிறார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அடிக்கடி பேசப்படும் வதந்திகள் மட்டும் குறையவில்லை.

சமீப காலமாக, நடிகர் விஜய் உடன் திரிஷாவை இணைத்து பல்வேறு கதைகள் பரவி வருகின்றன. இதற்கு மேலும் தீனி போட்டது, விஜய்யின் மனைவி தாக்கல் செய்ததாக கூறப்படும் விவாகரத்து மனுவில் இடம்பெற்ற தகவல்கள். அந்த மனுவில், “ஒரு நடிகையுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு” குறித்து குறிப்பிட்டதாகவும், அவசியம் ஏற்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளிப்படுத்துவேன் எனவும் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Vijay trisha at event

இந்த விவகாரம் குறித்து விஜய் எந்தவிதமான பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்த நிலையில், அடுத்த நாளே அவர் மற்றும் Trisha Krishnan ஒரே மேடையில் தோன்றியது மீண்டும் விவாதத்திற்கு வழிவகுத்தது. தயாரிப்பாளரின் மகன் திருமண விழாவில் இருவரும் இணைந்து பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

Advertisement

இதற்கிடையில், எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் வைரலான “Punch குரங்கு” வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், மற்ற குரங்குகளால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு குரங்கு, ஒரு பொம்மையை தாயாக நினைத்து அதனை கட்டிப்பிடித்து உறங்கும் காட்சி பலரையும் உருக வைத்தது.

இதன் தொடர்ச்சியாக, அந்த குரங்கிற்கு புதிய தோழி கிடைத்த பிறகு, அவளுக்காக மற்றொரு குரங்குடன் சண்டை போடும் காட்சியையும் திரிஷா பகிர்ந்துள்ளார். அதற்கு அவர் “Now that’s a gentleman” என பதிவு செய்திருப்பது, ரசிகர்களிடையே பலவிதமான அர்த்தங்களை கிளப்பியுள்ளது.

Advertisement

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இது திரிஷாவின் நிஜ வாழ்க்கை சூழ்நிலையை பிரதிபலிப்பதாக கிண்டலாகவும், கருத்துக்களாகவும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதை சாதாரணமான பதிவாகவே எடுத்துக்கொண்டாலும், மற்றொரு தரப்பு, ஏற்கனவே விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இப்படியான பதிவுகள் தேவையற்ற விவாதங்களை தூண்டும் என விமர்சித்து வருகின்றனர்.

மொத்தத்தில், திரிஷாவின் ஒரு சாதாரண சமூக வலைதள பதிவு கூட இப்போது பெரிய அளவில் பேசப்படும் விவகாரமாக மாறி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...