Coimbatore election updates: கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட நாதக, தவெக கட்சிகளைச் சேர்ந்த பெண் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனிடையே கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கான தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் இன்று அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து கவுண்டம்பாளையம் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி வினோத்குமாரிடம் மனுத் தாக்கல் செய்தார்.
இவரைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் தனது கூடுதல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
Click Here to read news:கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம்ரூ. 45 லட்சம் டிஜிட்டல் மோசடி!
செய்தியாளர்களிடம் பேசிய கலாமணி , “பிரச்சாரத்துக்கு செல்லும் பகுதிகளில் தற்போதையுள்ள சட்டமன்ற உறுப்பினர் யார் என்றே தெரியவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. பத்தாயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுப்பதாக மாறி மாறி ஒவ்வொரு கட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன பொருள் வாங்க முடியும். எனவே அதை நம்பி ஏமாற வேண்டாம்” என்றார்.

