தனுஷ் – மிருணாள் இணைவது உறுதி.. பேச்சுவார்த்தை சக்சஸ்!

தனுஷ் – மிருணாள் குறித்த வதந்திகள் இணையத்தில் பரவிய நிலையில் தற்போது இருவரும் இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் தனுஷ். அவர் முதன்முதலில் இயக்குநராக அறிமுகமான படம் ப.பாண்டி.

Dhanush

இந்த படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது 50வது படமாக ராயன் படத்தை இயக்கினார். ஆனால் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Advertisement

பின்னர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறாமல், விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது.

NEEK

இதையடுத்து அவர் இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி நடித்தார். படம் படுதோல்வியடைந்த நிலையில் தனது நடிப்பில் கவனம் செலுத்தினார்.

Idly Kadai

இந்நிலையில், நடிகர் தனுஷ் நடித்துள்ள அடுத்த படம் கர. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படம் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்குப் பிறகு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், தனுஷின் அடுத்த இயக்குநர் முயற்சி குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்த புதிய படத்தில், அவர் முதல் முறையாக மிருணாள் தாகூர் உடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதை ஒரு நாட்டுப்புற தெய்வத்தை மையமாகக் கொண்டதாகவும், 1960களை பின்னணியாகக் கொண்டு உருவாகும் காலப்பின்னணி கதையாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dhanush Direct Mrunal in New movie

மேலும், இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள்—போட்டோஷூட், லுக் டெஸ்ட் உள்ளிட்டவை—ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு இடைவெளிகளில், இந்த புதிய படத்தை இயக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

விவாதத்தின் போது, தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் ஒன்றாக சந்தித்து பயணம் செய்ததாகவும், லுக் டெஸ்ட் பணிகளில் ஈடுபட்டதாகவும் வெளியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

Rumour

இதை அடிப்படையாகக் கொண்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற வதந்திகளையும் சிலர் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பிரபல தொகுப்பாளருடன் 2வது திருமணம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ!

இரண்டாவது திருமணம் செய்தது குறித்து பல தகவல் பரவி வந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

Video