கோவை: அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதிற்கான விண்ணப்பங்களை தகுதியானோர் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் என கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவத் துறை, சமூக சேவை, அறிவியல், பொது விவகாரம், சிவில் சேவைகள், வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு “பத்ம விருது” வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அடுத்த ஆண்டும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதிற்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளமான https://awards.tn.gov.in/ மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குள் கீழே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மாவட்ட சமூக நல அலுவலர்,மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவை – 641018 என்ற முகவரிக்கு
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


