முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்!

தமிழக அரசியலில் இன்று புதிய அத்தியாயம் ஒன்று தொடங்கியுள்ளது. திரையுலகில் முன்னணி நடிகராக ரசிகர்களின் இதயங்களை வென்ற விஜய், தற்போது மக்கள் ஆதரவுடன் மாநிலத்தின் உயரிய பொறுப்பான முதலமைச்சர் பதவியை ஏற்றுள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கோலாகல விழாவில், தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களிடையிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்வர் விஜய், தான் பதவி ஏற்றதும் பேசிய உரையில் முந்தய அரசு நிறைய கடன் வைத்துள்ளதாகவும், அவர் விரைவில் தமிழக கஜானாவில் உள்ள இருப்பு நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட போவதாக கூறியுள்ள நிலையில்

Advertisement

மு.க. ஸ்டாலின் தனது X வலைத்தள பதிவில் கூறியதாவது:

“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்

மான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.

எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.

ஐந்து ஆண்டுகளாக கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளித்துதான் நாங்கள் எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாக நாங்கள் சொல்லிவிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதற்குப் பிறகுதானே நீங்கள் பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீர்கள்? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீர்கள்!

‘நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்’ எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.

தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!”

https://x.com/mkstalin/status/2053369532530700356?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2053369532530700356%7Ctwgr%5E97c075b30164b9c26cf4e47889d4698b8ee4b951%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2Fmkstalin%2Fstatus%2F2053369532530700356

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

3 COMMENTS

Comments are closed.

Recent News

உதயநிதியைக் கண்டித்து தவெக எம்எல்ஏ.,க்கள் ஆர்ப்பாட்டம்!

பெண்களை அவமதிக்கும் வகையில் பேச்சு இடம்பெற்றதாக குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை திரு.வி.க. நகரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.