கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதி விட்டு, நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற விபத்து காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. (CCTV) கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கோவை தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள மாதம்பட்டி அருகே நேற்று இரவு வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்தக் கொடூர விபத்தில் நிலைதடுமாறிய அந்த வாலிபர், பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் பல அடி தூரம் உருண்டு விழுந்தார்.
Click here to Read news : கோவையில் கள்ளநோட்டுகளை அச்சிட்ட மூவர் கைது…
இதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். ஆனால், விபத்தை ஏற்படுத்திய அந்தக் கார், நிறுத்தாமல் சம்பவ இடத்தில் இருந்து ‘மின்னல்’ வேகத்தில் பறந்தது.
இதைக் கண்டு அருகில் இருந்த கடைகளில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து, படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் அங்குள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளது.
வீடியோ
தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைத்து வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பேரூர் காவல் துறையினர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்தக் காரின் பதிவு எண்ணை வைத்து, காரை ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர்.




சமூகத்தை நினைத்தால் கவலையாக உள்ளது. கீழே கிடந்தவர் நம் உறவினராக இருந்தால், இப்படித்தான் தொடாதே என்பார்களா?