கோவையில் பேருந்துகள் குறைப்பு; பயணிகள் கடும் அவதி! சொந்த ஊருக்கு புறப்பட்டவர்கள் வேதனை!

கோவை: டீசல் விலை உயர்வால் கோவையில் பேருந்து சேவை குறைக்கப்பட்டதால், நள்ளிரவில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உக்கடம், சுங்கம், கருமத்தம்பட்டி, சூலூர், அன்னூர், மருதமலை மற்றும் ஒண்டிப்புதூர் பகுதிகளில் போக்குவரத்துக் கழக கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கிளைகளின் கீழ் மொத்தம் 165 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

CLICK HERE TO READ NEWS:கோவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த ரிப்போர்ட்!

Advertisement

இதனிடையே தற்போது டீசல் விலை அதிகரித்துள்ளதால், இந்த 165 சொகுசுப் பேருந்துகளின் பயண நடைகளையும் குறைக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டல மேலாண் இயக்குநர் மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின்படி, பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேர பயண நடைகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

CLICK HERE TO READ NEWS:கோவையில் கஸ்டமர் போல் வந்து வெள்ளி கொலுசை திருடிய பெண்- சிசிடிவி காட்சிகள்…

இதன் மூலம் 10 பயண நடைகள் மேற்கொள்ளும் ஒரு அரசு தாழ்தள சொகுசுப் பேருந்து தற்போது 6 பயண நடைகள் மட்டுமே மேற்கொள்கிறது. மேலும், 26 பயண நடைகள் மேற்கொள்ளும் பேருந்துகள் தற்போது 14 பயண நடைகள் மட்டுமே மேற்கொள்கின்றன.

கோவையின் சில பகுதிகளில் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவு பேருந்து பயணத்தை மட்டுமே நம்பி இருக்கும் எளிய மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இந்த பேருந்துகள் மட்டுமல்லாது, கோவையின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளும் குறைக்கப்பட்டுள்ளன.

பக்ரீத் தொடர் விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்குச் செல்ல நேற்று இரவு முதல் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் நள்ளிரவில் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...