கோவை: உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக எம்-சேண்ட் மணல் கடத்திய டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு துணை வட்டாட்சியர் கணேசன் தலைமையிலான குழுவினர், மேட்டுப்பாளையம் சாலை அவினாசிலிங்கம் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது, உரிய அனுமதியின்றி சுமார் 3 யூனிட் எம்-சேண்ட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மணலுடன் டிப்பர் லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் தொடர்பாக சிறப்பு துணை வட்டாட்சியர் கணேசன், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


