முதல்வர் அறிவுறுத்தல்- கோவை மாநகராட்சி கழிப்பறைகள் திடீர் ஆய்வு…

கோவை: முதல்வர் அறிவுறுத்தலின் படி கோவை மாநகராட்சி கழிப்பறைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் அமைந்துள்ள சமுதாயக் கழிப்பிடங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்களின் தற்போதைய நிலை குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் படி கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது கழிப்பிடங்கள் மற்றும் சமுதாய கழிப்பிடங்களான

கிழக்கு மண்டலத்தில் 77 எண்ணிக்கையிலும், மேற்கு மண்டலத்தில் 76 எண்ணிக்கையிலும், வடக்கு மண்டலத்தில் 47 எண்ணிக்கையிலும் தெற்கு மண்டலத்தில் 67 எண்ணிக்கையிலும், மத்திய மண்டலத்தில் 91 எண்ணிக்கையிலும் என ஐந்து மண்டலங்களிலும் சுமார் 224 எண்ணிக்கையிலான சமுதாயக் கழிப்பிடங்கள் மற்றும் 134 எண்ணிக்கையிலான பொதுக் கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில் கழிப்பிடங்களின் தற்போதை நிலை குறித்து, மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர்கள், மாநகர தலைமைப் பொறியாளர் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள்மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் பொதுக் கழிப்பிடங்களில் சுற்றுப்புறம் தூய்மையாக உள்ளதா, போதுமான தண்ணீர் வசதி உள்ளதாகழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா, குழாய்கள் பழுதடைந்துள்ளதா மற்றும் தண்ணீர் வசதிகள் செயல்பாட்டில் உள்ளதா, மின்விளக்குகள் செயல்பாட்டில் உள்ளதா, கதவுகள் பூட்டும் நிலையில் உள்ளதா, பராமரிப்பு பணியாளர்கள் பணியில் உள்ளனரா?

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா மற்றும் தினசரி சுத்தம் செய்வதற்கான பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கழிப்பிடங்களில் தேவையான வசதிகள் குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளும் இதனை பின்பற்ற வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சியர்…

கோவை: கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை அனைத்து பள்ளிகளிலும் எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.