கோவை: உடல் ஆரோக்கியத்தை மையமாக கொண்டு 363 கிமீ ஓடியே இளைஞர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெங்களூரில் இருந்து கோவை வரை 363 கிலோமீட்டர் ஓடியே வந்து சந்தோஷ் என்ற இளைஞர் சாதனை புரிந்துள்ளார்
பொதுமக்கள் மத்தியில் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் பெங்களூர் லால்பாக் பகுதியில் இருந்து கோவை வரை 363 கிலோமீட்டர் தூரம் நான்கு நாட்களில் ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம்,ஈரோடு,திருப்பூர் வழியாக கோவை ரேஸ்கோர்ஸ் வந்தடைந்தார். அவருக்கு அவரது நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
இது குறித்து இளைஞர் சந்தோஷ் கூறுகையில், அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நான்கு நாட்களில் கடுமையான வெயிலில் ஓடி வந்து இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்ததாக தெரிவித்தார்.


