வடவள்ளியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை; சிசிடிவி காட்சிகள் ஆய்வு

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் அடுத்தடுத்து உள்ள மூன்று வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வடவள்ளி கஸ்தூரிநாயக்கன்பாளையம், நேரு நகர் 2-வது வீதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள மூன்று வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டு உரிமையாளர்களான சந்திரசேகரன், செந்தில்குமார், கிருஷ்ணராஜ் ஆகியோருக்கும், வடவள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூன்று வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், வீட்டு உரிமையாளர்களை தொடர்புகொண்ட போலீசாரிடம், அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும், கோவை நோக்கி திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள் வந்த பின்னரே வீடுகளில் இருந்து என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளன, எவ்வளவு மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயுள்ளன என்பது குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

இந்தியாவில் சித்திரவதை எதிர்ப்பு சட்டம் ஏன் இல்லை? கோவையில் வழக்கறிஞர் விளக்கம்

இந்தியாவில் சித்திரவதைக்கு எதிராக தனி சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் வழக்கறிஞர் சுந்தரராஜன் தெரிவித்தார்.

Video

கோவையில் முதியவரிடம் தகராறில் ஈடுபட்ட திருநங்கை- வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி…

கோவை அன்னூரில் முதியவரிடம் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி, போலீஸ் விசாரணை கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.