கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் ரோஜ்கார் நிகழ்ச்சி…

கோவை: கோவை மத்திய அரசின் ரோஜ்கார் யோஜனா நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய அரசின் பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

Advertisement

நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை மண்டலத்தைச் சேர்ந்த தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தின் அதிகாரிகள் கே.பிரசாந்த் மற்றும் ஸ்வாகதா ராய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படுவதாகவும், சர்வதேச அளவில் பல்வேறு சவால்களை தொழில்துறையினர் சந்தித்து வரும் சூழலில் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை வளர்த்து வேலை வாய்ப்பை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை 300க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மண்டலத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள 10 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், 5 தொழில் நிறுவனத்தினருக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன.

Advertisement

பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் முதல் முறையாக வேலையில் சேர்ந்தவர்கள், வேலை வழங்குநர்களுக்கு ஊக்கத்தொகையை நேரடி பலன் பரிமாற்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் வழங்கினார்.

இதற்காக நாடு முழுவதும் சென்னை, கோவை, மதுரை உட்பட 200 இடங்களில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நேரலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஈஷா – கங்கா மருத்துவமனை இணைந்து இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்

ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாமில், 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் பழங்குடியின பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...