கனமழையால் கொந்தளிக்கும் கோவை குற்றாலம்… சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடல்!

கோவை: கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இன்று (ஜூலை 3) கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Also Read: கோவையில் தவெக தொண்டர் அட்டூழியம்- அப்பாவி மீது தாக்குதல் பரபரப்பு வீடியோ

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால், கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், நீரின் வேகமும் அதிகரித்துள்ளது.

Advertisement

VIDEO

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு, இன்று ஒருநாள் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையத்தை மூடுவதாக போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அறிவித்துள்ளார்.

Advertisement

Also Read: பார்ட்டி பண்ட் பற்றி திமுகவில் இருக்கும் போது தெரியாது- CPIM சண்முகம் பேட்டி..

மேலும், பொதுமக்கள் யாரும் அருவிப் பகுதிக்கு வருவதைத் தவிர்த்து, வனத்துறையின் அறிவுறுத்தல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மழையின் நிலை மற்றும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை சீரடைந்ததும் சுற்றுலா மையம் மீண்டும் திறக்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...