கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 5 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

கோவை : கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்குகளுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கோவையில் மேலும் 5 பேரின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இதன்படி, கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பெரோஸ், நவாஸ், புக்கு சதாம், அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையின்போது சம்பந்தப்பட்ட ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் நிதி வசூல், பணப் பரிவர்த்தனை தொடர்பான பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இதே வழக்கு தொடர்பாக உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த அசாருதீன் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது மேலும் ஐந்து பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisement

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் நிதி வசூல் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிய பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை; 10-க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை துடியலூரில் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய வாகனச் சோதனையில், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து விதிமீறிய ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...