“உணவில் புழு” என மாணவர்கள் புகார்… கற்பகம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு- வைரல் வீடியோ

கோவை: ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழு இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி, நள்ளிரவில் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை – பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரி பகுதியில் இயங்கி வரும் கற்பகம் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரவு உணவில் புழு மற்றும் பூச்சிகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், உடனடியாக விடுதி காப்பாளர் மற்றும் உணவக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், தங்களது புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய மாணவர்கள், விடுதி வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தரமான மற்றும் சுகாதாரமான உணவை வழங்க வேண்டும்”, “மாணவர்களின் உடல்நலனுடன் அலட்சியமாக நடந்து கொள்ளக்கூடாது” என முழக்கங்களை எழுப்பினர். இதனால் நள்ளிரவில் விடுதி வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

Advertisement

தகவலறிந்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் முன்வைத்த குறைகளை உடனடியாக பரிசீலித்து, உணவின் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிர்வாகம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

இருப்பினும், விடுதி உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதார நிலை குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, குறைபாடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

VIDEO

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மாணவர்கள் உணவின் தரம் குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

உக்கடத்தில் பயங்கரம்; ஆயுதங்களுடன் வீட்டைச் சூழ்ந்த கும்பல்… 5 பேர் கைது

உக்கடம் பகுதியில் நள்ளிரவில் வாலிபரின் வீட்டை ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...