கோவையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிய தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி..

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் ஊராட்சியில், பட்டியலின மக்கள் வசிக்கும் அண்ணா நகர் பகுதிக்குள் அரசு பேருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கெம்பனூர் செல்லும் அரசு நகரப் பேருந்து எண் 21, நீண்ட ஆண்டுகளாக அண்ணா நகர் பகுதிக்குள் செல்லாமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

சமீபத்தில் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வின்போது இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பயனாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து இன்று முதல் அண்ணா நகர் பகுதிக்குள் இயக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement

பேருந்து வருகையை முன்னிட்டு மக்கள் மலர் தூவி வரவேற்று, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது சமூக நீதி முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...