ஒருபுறமாக சாய்ந்தபடி சென்ற தமிழக அரசு பேருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
விஜய்யை பவர்சென்டர்கள் இயக்குகின்றனர் என்றும், திமுகவை மட்டும் குறிவைத்து பேசுவது உள்நோக்கம் கொண்டது என்றும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் விமர்சித்துள்ளார்.
“டாஸ்மாக் பிரச்சனை என்பது 200 படிகள் கொண்டது. நான் தற்போது 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளை ஏறி விரைந்து நடவடிக்கை எடுப்பேன்” என அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
சூலூரில் புதிய மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துள்ள நிலையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தவெக எம்.எல்.ஏ. சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும், சாலை, தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கலைக்கல்லூரி திட்டங்கள் குறித்தும் அவர் அப்டேட் அளித்துள்ளார்.
கோவை அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் காட்டு யானை வழிமறித்த நிலையில், “போ சாமி தெக்கால” என பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த காட்சி வைரலாகி வருகிறது. பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை கற்பகம் கல்லூரியில் நடைபெற்ற District Silambam Championship 2026–2027 போட்டியில், SMV சிலம்பம் அகாடமி மாணவி மானசா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை கோயில்களில் நாளை முதல் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
Coimbatore மருதமலை அருகே கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புக்குள் வழிதவறி வந்த அரிய எறும்புத்திண்ணி பத்திரமாக மீட்கப்பட்டு வனக்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் வனப்பகுதிக்குள் விட வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.