கோவை வெள்ளலூரில் முகமூடி அணிந்து மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் செயின் பறித்த கல்லூரி மாணவர் மற்றும் அவரது காதலியை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 1,200 பச்சிளம் குழந்தைகள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். செப்டம்பர் 15-ம் தேதி திட்டம் தொடங்குகிறது.
பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சன்னிதானமாக இருந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 8-ம் ஆண்டு குருபூசை விழா பேரூரில் நடைபெற்றது. யாகசாலை வேள்வி, கலச பூஜை, அபிஷேகம், ஆராதனை மற்றும் பேரொளி வழிபாடு நடைபெற்ற நிலையில், ‘வைராக்கிய சதகம்’ நூலும் வெளியிடப்பட்டது.
கல்லூரி மாணவியும் மாணவனும் இணைந்து வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயினை பறித்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் துப்பு துலங்கிய நிலையில், நகை, 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சின்னவேடம்பட்டியில் பிரகாஷ் குறித்து கேட்டதற்கு தெரியாது என பதிலளித்த வாலிபரை கல் மற்றும் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்