கோவை சுங்கம் அரசு பேருந்து பணிமனையை முற்றுகையிட்டு தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் பள்ளி வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவர்கள், ஓட்டுநர் மற்றும் இளைஞர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
கோவையில் உள்ள அரசு கட்டிடத்தின் பராமரிப்பு நிலை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. கட்டிடத்தின் வெளிப்புற சுவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், பராமரிப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
கோவையில் நடைபெற்று வரும் பட்டுப்புடவை கண்காட்சியில் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான சேலை மற்றும் பாரம்பரிய சேலைகளின் நவீன வடிவங்கள் பெண்களை கவர்ந்து வருகின்றன.
வன்னியர் சமூகத்திற்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.