கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் சாலையில் அட்டம் இளைஞர்களின் பைக்குகள் பறிமுதல்…
அவர் தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த பவன் குமார் ரெட்டி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.



