“பாட்டிலுக்கு பத்து ரூபாய் பாடியவர்கள் இப்போது என்ன பாடப் போகிறார்கள்?” – தமிழிசை கேள்வி..!

கோவை: பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடியவர்கள் இப்போது பாட்டிலுக்கு இருபது ரூபாய் என்று பாடப் போகிறார்களா? இல்லை குடித்துவிட்டு ஆடப் போகிறார்களா என்று எதுவும் தெரியவில்லை என்று கோவையில் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பிஎம் ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதற்கு எனது கண்டனத்தை பதிவு செய்து விட்டேன். கல்வி அமைச்சர் ராஜ்மோகன் எங்கள் கொள்கையை சமரசம் செய்து மாட்டோம் என்கிறார். இது அரசியல் கிடையாது, குழந்தைகளின் எதிர்காலம்.

Advertisement

புதிய அமைச்சர்கள் தங்களது கருத்துக்களை ஆழமாக சிந்திக்காமல் பொதுவாக கூறுவது, மக்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியாமல் பேசுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.

Click here to Read news: சாலையில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்… பைக்குகளை பறிமுதல் செய்த போலீஸ்..!

முதல்வர் நடத்தும் பள்ளியிலேயே மூன்று மொழி இருக்கிறது. பணம் கொடுத்து படிக்கும் குழந்தைகளுக்கு மூன்று மொழி, ஏழை குழந்தைகளுக்கு இரண்டு மொழி. ஏழை குழந்தைகளுக்கு தொழில்நுட்ப ரீதியான கல்வி கிடையாது என்ற சூழ்நிலை இருக்கக் கூடாது.

Advertisement

இப்படி எல்லாம் நடந்துகொண்டதினால் தான் திமுகவை மக்கள் புறக்கணித்தார்கள். மறுபடியும் அதே தவறை செய்ய வேண்டாம் என்பது எனது கருத்து.

மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் இங்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் திமுகவின் தொடர்ச்சியாக இந்த ஆட்சி நடப்பது நல்லது அல்ல. விஜய்க்கு தனித்தன்மை இருக்க வேண்டும்.

திமுகவின் கூட்டணி கட்சிகள்தான் இவருக்கு ஆதரவு தருகிறார்கள். அதனால் அழுத்தம் கொடுத்து, அதற்கு அடிபணிந்து மாற்றமில்லாமல் செய்து விடக்கூடாது என்பது நமது கவலையாக இருக்கிறது.

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இருந்தோம். அதனை தவெக செய்துவிட்டது. நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது பின்னர் நிறைவேறும்.

Click here to Read news: கோவையில் 3,500 மருந்துக் கடைகள் அடைப்பு மருந்து வாங்க என்ன செய்யலாம்?

அதிமுக – பாஜக கூட்டணி பயங்கரமாக தோற்கவில்லை. திமுக கூட்டணிதான் பயங்கரமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்.

2031 எங்களுக்கான ஆட்சி. இன்று சனாதன தர்மத்தை பற்றி உதயநிதி பேசுகிறார். தவெகவின் எம்எல்ஏக்கள் முஸ்தபா, ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசுகின்றனர்.

முதலமைச்சர் விஜய் இதனை கண்டிக்க வேண்டும். இதேபோன்று இந்துக்களின் உணர்வை புண்படுத்திக்கொண்டே இருந்தால், நிச்சயமாக உங்களுக்கு வாக்களித்தவர்கள் கூட வருத்தப்படுவார்கள்.

முதலமைச்சர் அறையிலேயே ஒருவர் ரீல்ஸ் எடுக்கிறார். ரீலிலிருந்து ரியலுக்கு வர வேண்டும்.

செயலாற்றுவதில் தீவிரத்தன்மை இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக வந்தோம் என்றார்கள். 17 லட்சம் கட்டுமான டெண்டர் 6 மணி நேரத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் கவலை அளிக்கிறது.

கிட்னி திருட்டு தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட வேண்டும். சென்ற ஆட்சியில் நடந்த தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டும். ஆனால் இரட்டிப்பாக நடக்க ஆரம்பிக்கிறதோ என்று பயமாக இருக்கிறது. கொலைகள், பாலியல் பலாத்காரம் இந்த ஒரு வாரத்தில் அதிகரித்திருக்கிறது. சிங்கப்படை அமைத்தார்கள், ஆனால் அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

பாட்டிலுக்கு பத்து ரூபாயா, 20 ரூபாயா என்ற கேள்வி இன்னும் மக்களுக்கு இருக்கிறது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடியவர்கள் தற்போது பாட்டிலுக்கு இருபது ரூபாய் என்று பாடப் போகிறீர்களா? இல்லை குடித்துவிட்டு ஆடப் போகிறார்களா என்று எதுவும் தெரியவில்லை.

முதல்வர் காலையிலிருந்து மாலை வரை அலுவலகத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அமைச்சர்களை கூப்பிட்டு பேச வேண்டும்.

Click here to Read news:10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 97.09 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அதிகாரிகள் கூட்டம் எப்படி நடத்தினார் என்று பார்க்கும்போது கவலை அளிப்பதாக இருந்தது. புதியவர்களுக்கு வழிகாட்டுதல் நடக்க வேண்டும். புதிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வழிகாட்ட வேண்டும்.

பாஜக புறக்கணிக்கப்படவில்லை. ஒரே ஒரு எம்எல்ஏவாக இருந்த திமுக ஆட்சிக்கு வந்தது. நாங்கள் இரண்டு எம்பிகளாக இருந்தவர்கள், இப்போது 20 மாநிலங்களை ஆண்டு வருகிறோம். வெற்றி, தோல்வி என்பது சகஜம். நாங்கள் வாக்கு சதவீதத்தை அதிகரித்திருக்கிறோம். இந்த தோல்வி யாரும் எதிர்பார்க்காதது.

மழை தூறும் என்று நினைத்தோம், சுனாமியே வந்துவிட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்கான அரசியலில் தெம்பு இருக்கிறது.

எங்களுக்கு கொள்கையும் இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் ரீல்ஸை மட்டும் நம்புபவர்கள் அல்ல, ரியல் வாழ்க்கையை நம்புபவர்கள்.

பதவி ஆசைக்காக உள்ளே சென்றுவிட்டு, கவர்னர் உள்ளே வரக்கூடாது, பாஜக உள்ளே வரக்கூடாது என்று கூறுகிறார்கள். திமுக கூட்டணி உடைந்து சுக்குநூறாகிவிட்டது.

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை இருக்கிறது. அவர்கள் பேசிய பிறகு நாங்கள் இது குறித்து பேசுகிறோம்.

தவெகவினர் ஐடி விங்கில் பலமாக உள்ளனர். மற்றவர்கள் அதனை மேம்போக்காக பார்த்தார்கள். இவர்கள் குழந்தைகளை கூட இன்ஃப்ளூயன்ஸ் செய்தார்கள் என்பது கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இது சட்டத்திலேயே உள்ளது.

இவ்வாறு தமிழிசை சௌந்தர்ராஜன் பேசினார்.

“பெரிய அளவில் வாக்கு வாங்கி தோற்றபோது வெற்றிகரமான தோல்வி என்று சொன்னீர்களே, இந்த தோல்வியை என்ன சொல்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,

“இது வெற்றி பெறக்கூடிய தோல்வி” என்று பதிலளித்தார்.

“அண்ணாமலைக்கு மீண்டும் மாநில தலைவர் பதவி கிடைக்குமா?” என்ற கேள்விக்கு, கையெடுத்து கும்பிட்டபடி தமிழிசை சௌந்தர்ராஜன் அங்கிருந்து புறப்பட்டார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.