கோவை: கோடை வெயிலில் இருந்து கல்யாணி யானையை பாதுகாக்க பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் புதிய சவர் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பேரூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள கல்யாணி யானைக்கு கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் சிறப்பு குளியல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யானை குளிக்கும் தொட்டியின் அருகே புதிதாக பலமுனை தானியங்கி சவர் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலிருந்து கொட்டும் குளிர்ந்த நீரில் கல்யாணி யானை ஆனந்தமாக குளித்து மகிழ்கிறது.
செயற்கை சாரல் மழையை ரசித்தபடி தும்பிக்கையை உயர்த்தி, தலையசைத்து உற்சாகமாக குளிக்கும் கல்யாணி யானையின் காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சிறப்பு சவர் குளியல் வழங்கப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


