கோவை: மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதுடன், மாணவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் கல்லூரிக்கு செல்லும்போது, இளைஞர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
Also Read: கங்கனா VS க்ரீத்தி சனோன் மோதல்… கவர்ச்சி ஆடை to பாரத மாதா கி ஜெய் வரை…
இந்நிலையில், நேற்று மீண்டும் அந்த இளைஞர் கல்லூரி மாணவியை வழிமறித்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், மாணவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
Also Read: கோவையில் பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு…
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரவீந்திரன் (39) என்பதும், பெயிண்டராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரவீந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





