கோவை: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி (120-கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற) தொகுதிக்கு உட்பட்ட வஉசி மைதானத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் -2026ஐ முன்னிட்டு, 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன் (மத்தியம்), காவல்துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் ஆணையாளர், ஆகியோர்கள், 100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஓட்டி, ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்து, செல்பி பாயிண்ட் முன்பு நின்று புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Click here to read news :100% வாக்குப்பதிவு- கோவையில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு…
இந்நிகழ்ச்சியில், ஒட்டுவில்லை ஒட்டப்பட்ட 80க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வ.உ.சி மைதானத்திலிருந்து பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்.ஐ.சி வழியாகமகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, காந்திபுரம், செம்மொழி பூங்காவ.உ.சி பூங்கா வழியாக சென்று மீண்டும் வ.உசி மைதானத்தை வந்தடைந்தது.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட தொடர்பு மையம் மற்றும் ஊடகச் சான்றிளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மையத்தினை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்

