விஜய் சுற்றி ஏராளமான சர்ச்சைகள் விழுந்து வரும் நிலையில் விமான நிலையத்தில் திரிஷா கொடுத்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது அவரது மனைவி பகீர் குற்றச்சாட்டு வைத்ததுதான் அண்மையில் ஹாட் டாபிக்காக இருந்தது.
சங்கீதா புகார்
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்ததால்தான் விவாகரத்து வரை வந்ததாகவும் விஜய் மனைவி சங்கீதா புகார் கூறியிருந்தார். மேலும் தனக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகை யார் என கூறுவேன் என கூறியிருந்தார்.

ஆனால் சினிமாத்துறையை சேர்ந்தவரின் திருமண நிகழ்ச்சியில் நடிகை திரிஷா உடன் ஒன்றாக விஜய் பங்கேற்றது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா ஒரே இடத்தில் காணப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பல்வேறு கருத்துக்களை கிளப்பியிருந்தன.
திரிஷா ரியாக்ஷன்
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த நடிகை திரிஷாவை பார்த்த ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதே நேரத்தில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரபல திருமண நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் அவர் ஒன்றாக பங்கேற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் அந்த நிகழ்ச்சி குறித்து நேரடியாக திரிஷாவிடம் விளக்கம் கேட்க செய்தியாளர்கள் முயன்றனர். ஆனால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க விரும்பாத திரிஷா, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தார்.

குறிப்பாக விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், இவர்களின் நட்பு குறித்து எப்போதும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
கேள்வியை எழுப்பிய மௌனம்
இந்நிலையில் விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த சிறிய தருணமே தற்போது இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. திரிஷா எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக அங்கிருந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் கேள்வியை சாதாரணமாக திரிஷா தவிர்த்ததாக கூறுகின்றனர். மற்றொருபுறம், சிலர் திரிஷாவின் இந்த மௌனமே பல கேள்விகளை எழுப்புகிறது என்றும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

