முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!

கோவை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

Advertisement

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில்,

எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து களம் காண்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

இது தவிர சீமான் வழக்கம் போல் தனித்து போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் முதன்முறையாக களம் காண்கிறது.

tamilnadu election date details  in tamil

இது தமிழகக் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகம் 4 முனை போட்டியைச் சந்திக்க உள்ளது.

Advertisement

இதனிடையே தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிக்க உள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. இதனால், அரசு புதிய அறிவிப்புகள், நலத்திட்ட தொடக்க விழாக்கள், அரசியல் விளம்பரங்கள் உள்ளிட்டவை கட்டுப்பாட்டுக்குள் வர உள்ளன.

இன்றைய அறிவிப்பை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்! பழைய ரீல்ஸின் ஆடியோவை இனி மாற்றலாம்

இன்ஸ்டாகிராம் புதிய 'Replace Audio' அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பழைய ரீல்ஸ் மற்றும் வீடியோ பதிவுகளை நீக்காமல், அதிலுள்ள ஆடியோவை மட்டும் மாற்றும் வசதி பயனாளர்களுக்கு கிடைத்துள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...