கோவையில் பாஜகவுக்கு ஒரு சீட் ஒதுக்கியது அதிமுக!

கோவை: அதிமுக கூட்டணியில் கோவையில் ஒரு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமுமுக, தமாகா, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதன்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமுமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisement

தொடர்ந்து, அதிமுக சார்பில் களமிறங்கும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்றக் கொறடாவுமான எஸ்.பி. வேலுமணிக்கு தொண்டாமுத்தூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Advertisement
Vanathisrinivasan

இந்த சூழலில், நடப்பு தேர்தலில் கோவையில் அதிமுக 9 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாறாக, கோவை வடக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிமுக இறுதி செய்துள்ளது.

இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுவாரா அல்லது பாஜக நிர்வாகிகளில் வேறு யாரேனும் களம் காண உள்ளார்களா என்பது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இருந்தாலும், தொகுதி மாறி பாஜக போட்டியிடுவது, ஏற்கனவே தெற்கு தொகுதியில் உள்ள அதிருப்திகளை ஈடுகட்டவும், புதிய தொகுதியில் கட்சியை வளர்க்கவும் உதவும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அரசு கலைக்கல்லூரியில் PG Admission; சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு

கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினரின் கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது; 557 இடங்களுக்கு 5,046 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.