என்னுடைய தொகுதியை காட்டிலும் கோவையே முக்கியம்- உதயநிதி ஸ்டாலின் பரப்புரை…

கோவை: என்னுடைய தொகுதியை காட்டிலும் கோவையில் வெற்றி பெறுவது தான் முக்கியம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்தும் வடக்கு தொகுதி வேட்பாளர் செந்தமிழ் செல்வனை ஆதரித்தும் உதயநிதி ஸ்டாலின் காந்திபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்

முன்னதாக சிறுவன் ஒருவன் ஓவியம் வரைந்து உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசளித்தார்.மற்றொரு சிறுவன் ஒருவன் வாகனத்திற்கு மேலே ஏறி உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற நிலையில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு செல்லுங்கள் என்று சிறுவனிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

மேலும் தொண்டரின் செல்போனை வாங்கி செல்பி வீடியோ எடுத்துக்கொண்டார்

Advertisement

பின்னர் மக்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கோவை தெற்கு தொகுதி செந்தில்பாலாஜி வடக்கு தொகுதி செந்தமிழ் செல்வன் இருவருக்கும் வாக்கு கேட்டு வந்துள்ளேன் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கும் வந்தேன் பிரச்சாரம் செய்தேன், ஆனால் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம், அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது என்றார்.

கோவை எழுச்சியை பார்க்கும் பொழுது வெற்றி உறுதி என்பது தெரிகிறது என்றும் இந்தி திணிப்பிற்கு எதிராக ராணுவத்தையே சந்தித்த வீரமும் துணிச்சலும் இளைஞர்களை தந்த மண் இந்த கோவை மண் என்றார்.

Advertisement

மேற்கு மண்டலத்தை கழகத்தின் கோட்டையாக மாற்றி வைத்துள்ளவர் செந்தில் பாலாஜி , இவரது உழைப்பை பார்த்த பாசிச சக்திகள் இவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள், நாடாளுமன்றத்தில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தார்கள் ஆனால் சங்கிகளின் கனவு எல்லாம் பொய்யாகி நாம் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தோம் என்றார்.

பாசிச கூட்டமும் சங்கிக் கூட்டமும் கோவையை அவர்களுடைய கோட்டை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
இது திமுகவின் கோட்டை என்பதை செந்தில் பாலாஜி ஒவ்வொரு அசைவிலும் நிரூபித்து கொண்டிருக்கிறார் என்றார். கரூர் செந்தில் பாலாஜிக்கு பிறந்த வீடு கோவை செந்தில் பாலாஜிக்கு புகுந்த வீடு என கூறிய அவர் பிறந்த வீட்டை பார்த்துக்கொண்டது போல் புகுந்த வீட்டையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

வடக்கு தொகுதி வேட்பாளர் செந்தமிழ் செல்வன் உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்தான், செந்தமிழ் செல்வன் இளைஞர் அணியில் இருந்து வந்தவர் தான் கோவை தெற்கு தொகுதிக்கு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை விவரித்தார்.மேலும் பெரிய கடை வீதி கிராஸ் கட் வீதியில் மல்டி லெவல் ஷாப்பிங் மால் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள் நம்முடைய ஆட்சி அமைந்ததும் அது செய்து தரப்படும், புளியகுளம் அம்மன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது ஆட்சி அமைந்த உடன் அந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். கடந்த முறை அளித்த வாக்குறுதியில் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம்
காலை உணவு திட்டம், மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம், கல்லூரிகளில் மாணவர்களுக்கான திட்டங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்

தேர்தலுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்துவதற்கு அதிமுக பாஜக நினைத்தார்கள், ஆனால் நம்முடைய முதலமைச்சர் முன்கூட்டியே மூன்று மாத மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை கால சிறப்பு தொகை ஆகியவற்றை கொடுத்தார் நம்முடைய முதல்வர் அளித்த மகளிர் உரிமை தொகையை ஒன்றிய அரசு பேங்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி எடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் நீங்கள் அனைவரும் 9:00 மணிக்கு அந்த 5000 ரூபாயை எடுத்து விட்டீர்கள் என்றார். அதேபோன்று சார்ப்பாக தேர்தல் நாளன்று அதிகாலையே சென்று செந்தில் பாலாஜிக்கு வாக்களித்து விட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வடக்கு தொகுதியில் செந்தமிழ்ச்செல்வனுக்கு வாக்களித்து விட வேண்டும் என்றார்.

தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று மோடியை சந்தித்து விட்டு முகத்தை மூடிக்கொண்டு வெளியில் வந்த புகைப்படத்தை விமர்சித்து ஒரு புகைப்படம் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் இடம் வழங்கினார். பின்னர் அந்த புகைப்படத்தை அந்த தொண்டரிடமே கொடுத்துவிட்டு எனக்கு வேண்டாம் என்று கூறி முரட்டு பக்தர்களை பார்த்து இருப்பீர்கள் முரட்டு தொண்டர்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் முரட்டு அடிமைகளை பார்த்து உள்ளீர்களா? மோடியின் நம்பர் ஒன் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி என்று நான் கூறினேன் அதற்கு தான் அவ்வளவு பஞ்சாயத்து என்று தெரிவித்தார்.

பின்னர் ஒருவர் மெட்ரோ ரயில் பொம்மையை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கினார். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு என்று ஏதாவது திட்டங்களை கொடுத்துள்ளார்களா?
என கேள்வி எழுப்பினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படத்தை காண்பித்து எனக்கு இந்த அனுபவம் எல்லாம் கிடையாது என்று தெரிவித்தார். இப்படி தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார் என்றும் விமர்சித்தார்.

மேலும் எனக்கும் இந்த புகைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் என்னை கெட்ட வார்த்தைகள் மட்டும் தான் அவர் திட்டவில்லை மற்றபடி செத்துப் போ என்று கூட கூறுகிறார் என்றார்.

இந்த தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணியை நாம் தோற்கடிக்க வேண்டும் தமிழ்நாடு அணி நாம் ஜெயிக்க வேண்டும், பத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி ஆக்க வேண்டும் என்றும்
சங்கி கூட்டத்தை தமிழ்நாட்டிற்குள் விடக்கூடாது அப்படி விட்டால் நமக்கு டேஞ்சர் அதில் கோயம்புத்தூர் மிகவும் முக்கியம் என்றார்.

நான் சேப்பாக்கத்தில் வேட்பாளராக நிற்கிறேன் அதை அவ்வப்போது மறந்துவிடுகிறேன் ஏனென்றால் அந்த தொகுதியில் ஒரே ஒருமுறைதான் வாக்கு கேட்டுச் சென்றுள்ளேன்
என்றும் எனக்கு என்னுடைய தொகுதியை விட செந்தில் பாலாஜி மற்றும் செந்தமிழ் செல்வனின் வெற்றி மிக மிக முக்கியம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி வெற்றியை விட கோவையின் வெற்றி மிக மிக முக்கியம் இருவரின் வெற்றி என்பது எதிர்த்து நிற்பவர்களின் டெபாசிட் போகின்ற அளவிற்கு இருக்க வேண்டும் என்றார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...