சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வழி கூறிய சைலேந்திரபாபு

கோவை: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வாசிப்புத் திறனை கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என்று சைலேந்திரபாபு வலியுறுத்தினார்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஒவ்வொருவரும் வாசிப்புத் திறனை கட்டாயம் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று கோவையில் ப்யூச்சர் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி விழாவில் சைலேந்திரபாபு பேசினார்.

குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கோவை கணபதி பகுதியில் ப்யூச்சர் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி (Future Leaders IAS Academy) தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி பெறும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 99 சதவீதம் வரை சலுகைக் கட்டணத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தேர்வைத் தொடர்ந்து மாணவர்களை முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்தார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பதவி என்பது ஒரு பதவி அல்ல, அது ஒரு பொறுப்பு என்று கூறினார். மேலும், ஏழைக் குடும்பத்தில் பிறந்த தாம் ஐபிஎஸ் பதவிக்கு வந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஒவ்வொருவரும் வாசிப்புத் திறனை கட்டாயம் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், துணிச்சலுடன் இந்த மையத்தைத் தொடங்கியிருக்கும் தார்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மையத்தின் நிறுவனர் தார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவில் சர்வீஸ் தேர்வில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்காக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், ஸ்காலர்ஷிப் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு 99 சதவீதம், 4 மற்றும் 5ம் ரேங்க் பெறும் மாணவர்களுக்கு 41 சதவீதம், 6 முதல் 10வது ரேங்க் பெறும் மாணவர்களுக்கு 18 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்கள், முன்னாள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும், இதை தொழிலாக அல்லாமல் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போதைப்பொருள் கடத்தல் கட்டுப்பாடு; நீதிமன்றம் கடும் நடவடிக்கை

கோவையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Video