கோவையில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன தெரியுமா?

கோவை: தமிழகத்தில் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில் கோவையில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன என்ற விவரம் வெளியாகி உள்ளது.

Advertisement

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் தற்போது 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், இந்த மூன்று இடங்களின் அருகிலும் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

Advertisement

Read news: சமையலறைக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்… வைரலாகும் மீட்பு வீடியோ

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதனிடையே கோவையில் 69 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் மூன்று கடைகள் இன்றே மூடப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read news :16 ஆண்டுகள் சிகிச்சை…வாழ்க்கையில் விரக்தி; விஷம் குடித்து ஜவுளிக்கடை ஊழியர் உயி**ப்பு

கோவை மாவட்டத்தில் 284 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், வடக்குப் பகுதியில் 48 கடைகளும், தெற்குப் பகுதியில் 21 கடைகளும் என 69 கடைகளை 15 நாட்களுக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் இன்றே சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த டாஸ்மாக் கடை உட்பட மொத்தம் 3 கடைகள் மூடப்பட்டன.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...