சிறுதொழில் முனைவோராக கோவையில் பயிற்சி…

கோவை: கோவையில் அடுமனை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி இரண்டு தினங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Advertisement

கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி வருகிற 16.06.2026 மற்றும் 17.06.2026 தேதிகளில் நடைபெறுகிறது. அடுமனை உணவுப் பொருட்களுக்கு தற்பொழுது மக்கள் மத்தியில், அதிக வரவேற்பு உள்ளது.

அதற்கான முக்கியக் காரணம் விரும்பத்தக்க வகையிலும் பற்சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதேயாகும். இந்தப்பயிற்சி சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே, பயிற்சியின்போது அடுமனைப் பொருட்கள் எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் ரொட்டி வகைகள்,ப்கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் ஆகியவை தயாரிக்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 (ரூ.1500 + GST 18%) செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி நடைபெறும் இடம்:
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்-641 003
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் 641003.
அலைபேசி எண் 9488518268 மின்னஞ்சல் : phte@tnau.ac.in ஆகும்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் மரத்தை வெட்டியவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம்- பொதுமக்கள் வரவேற்பு…

கோவை: கோவையில் அனுமதியின்றி மரத்தை வெட்டிய நபர்களுக்கு 2.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பாராட்டுதலை பெற்று வருகிறது. கோவை மாநகர் வெரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த சங்கர்லால் என்பவர் அவரது சொந்த இடத்திற்கு...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...