லிப்ட் அமைத்து தருவதாக ரூ.7.5 லட்சம் மோசடி; சென்னை நிறுவன பிரதிநிதிகள் மீது வழக்கு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய மோசடி வழக்கில் கைதான நபரை போலீசார் சின்னியம்பாளையத்தில் மீண்டும் கைது செய்தனர்.

கோவையில் வணிகக் கட்டிடத்தில் லிப்ட் அமைத்து தருவதாகக் கூறி ரூ.7.50 லட்சம் பெற்றுக்கொண்டு பணியை மேற்கொள்ளாமல் மோசடி செய்ததாக சென்னை நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனி (Saibaba Colony) ராமலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (54), தனது வணிகக் கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக சென்னை அரும்பாக்கம் (Arumbakkam) பகுதியில் செயல்படும் நிறுவனத்தின் பிரதிநிதிகளான ராஜ் டோரென்ஸ் மற்றும் பெஞ்சமின் ஆகியோரை அணுகியுள்ளார்.

அவர்கள் 15 நாட்களுக்குள் லிப்ட் அமைத்து தருவதாக உறுதியளித்து, அதற்காக ரூ.7.50 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் லிப்ட் அமைக்காததுடன், பெற்றுக்கொண்ட பணத்தையும் திருப்பி வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் ராஜ் டோரென்ஸ் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் மக்கள் நீதிமன்றம்- ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு…

கோவை: கோவையில் நடைபெற்ற மக்கள் நீதி மன்ற விசாரணையில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி இன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள்...

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.