பெயிண்டிங் பணியின்போது 2-வது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவை: கோவை பீளமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் அருணாச்சலம் ரோட்டைச் சேர்ந்த பரமேஸ்வரன் (34) என்பவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஒரு வாரமாக பீளமேடு துளசியம்மாள் லே-அவுட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம், கட்டிடத்தின் 2-வது மாடியில் நின்று பெயிண்டிங் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரமேஸ்வரனை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து அவரது சகோதரி தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

  1. பெயிண்ட் செய்யும் பொழுது இவர் ஏணியில் இருந்து தவற விழுந்துள்ளார். இவரின் உதவியாளர் கூட இருந்தாரா? சாதாரணமாக உயரங்களில் வேலை செய்யும் நடுத்தரக் குடி இருப்புகளில் வேலை செய்வோர் பாதுகாப்பு முறைகளை அனுசரிப்பதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி…

கோவை: கோவையில் வெகுவிமர்சையாக வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருபால் ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோவையில் ஏழாவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது....

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.