கோவை: கோவையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லாரிகளில் அரசு அனுமதி வழங்கியுள்ள எடையை மட்டுமே கொண்டு செல்வோம் என்றும் அதற்காக மூன்று நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சங்கத்தினர் கூறுகையில், 6 சக்கரங்கள் கொண்ட டிப்பர் லாரிகளில் 11.5 டன் மட்டுமே கட்டுமான பொருட்கள் ஏற்ற வேண்டும் ஆனால் 20 டன் ஏற்றப்பட்டு வந்ததாக தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் முழுவதும் அதிக எடை காரணமாக 33 லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதித்ததாகவும் அதிக எடை காரணமாக லாரிகள் ஓடுவதால் ஐந்து வருட சாலை ஒரு வருடத்திற்குள் சாலை குண்டும் குழியுமாக மாறி விடுவதாக தெரிவித்தனர்.
கடந்த கால அரசு லாபம் குறைவதால் வற்புறுத்தி லாரிகளில் அதிக எடையை ஏற்றி சென்றோம் என தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இன்று முதல் 3 நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும்.
அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக கனிம வளங்களை ஏற்றிச் செல்ல மாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த 3 நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கோவையில் காரணம்பேட்டை, காரமடை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்களும் லாரிகளில் அதிக பாரம் (Overload) ஏற்றக் கூடாது என்று லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, கோவையில் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் அடுத்த நான்கு நாட்களுக்கு இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



