உக்கடம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி படுகாயம்; சிகிச்சை பலனின்றி 52 வயது நபர் உயிரிழப்பு

கோவை : கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த 52 வயது நபர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

கோவை செட்டிபாளையம், போத்தனூர் ரோடு பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (52), கடந்த ஜூன் 27-ஆம் தேதி மாலை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோவையிலிருந்து பழனி நோக்கி புறப்பட இருந்த அரசு பேருந்து, சாலையைக் கடக்க முயன்ற விஸ்வநாதன் மீது மோதியதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு, இரு கால்கள், கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்தார்.

சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Advertisement

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

29 பேரை காயப்படுத்திய பேருந்து மீண்டும் அதிவேகத்தில்? மக்கள் அதிர்ச்சி!- வீடியோ

நீலாம்பூர் விபத்தில் 29 பேர் காயமடைந்த நிலையில், அதே தனியார் பேருந்து மீண்டும் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...