தந்தைக்கு மெசேஜ் அனுப்பி விட்டு தவறான முடிவெடுத்த புதுமணப் பெண்!

திருப்பூர்: மாமியார்-மாமனார் மன உளைச்சல் தருவதால் வாழப் பிடிக்கவில்லை என்று தந்தைக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு புதுமணப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்த சம்பவம் அவினாசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிதன்யா. இவருக்கு அவினாசி பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் கடந்த 78 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதனிடையே கோவிலுக்குச் செல்வதாக காரில் புறப்பட்ட ரிதன்யா, காரில் செல்லும் போதே விஷம் குடித்துள்ளார்.

மேலும், மாமனார்-மாமியார் தனக்கு மன ரீதியாக உளைச்சல் தருவதாகக் கூறி தனது தந்தைக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார்.

இதனிடையே விஷம் குடித்த ரிதன்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை மீட்டனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான இரண்டரை மாதங்களில் மாமனார்-மாமியார் கொடுமை தாங்காமல் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவினாசி சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp