தொகுதி மறு வரையறை- கோவையில் கருப்பு கொடி போராட்டம்…

கோவை: நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை கண்டித்து சிபிஐஎம் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறு வரையறை மசோதா இன்று அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனத்தை பதிவு செய்து இன்று கருப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் கருப்பு கொடி போராட்டமானது மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.

Advertisement

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் கருப்பு கொடி ஏந்தியும் கருப்பு பேட்ச் அணிந்தும் கண்டனத்தை பதிவு செய்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் அந்தக் கட்சி அலுவலகம் முன்பும் கருப்புக்கொடி நடப்பட்டது.

இதேபோன்று கோவையில் பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரவர் இல்லங்களுக்கு முன்பு கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கொரொனாவை விட கொடியவர் செந்தில்பாலாஜி- கோவையில் EPS பரப்புரை…

கோவை: கொரொனாவை விட கொடியவர் செந்தில்பாலாஜி என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராம் மற்றும்...

Video