பெண்களுக்கான உரிமை வழங்குவது இரண்டே கட்சி தான்- கோவையில் கே.சி.வேணுகோபால் பரப்புரை…

கோவை: திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தான் பெண்களுக்கான உரிமைகளை தரும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதியை ஆதரித்து இராமநாதபுரம் பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் பாஜக தமிழகத்தை ரிமோர்ட் கண்ட்ரோலாக வைக்க பார்க்கிறது என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷா ஆகியோர் பல்வேறு நெருக்கடிகளை தமிழக அரசுக்கு விளைவித்ததாக தெரிவித்தார். தொகுதி மறு வரை என்ற பெயரில் தமிழகத்தில் இடங்களை குறைக்க நினைத்ததாகவோ தமிழகத்திற்கு ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு நிதியையும் தராமல் நிறுத்தி வைத்ததாக குற்றம் சாட்டினார். .

திமுக காங்கிரஸ் இரு கட்சிகளும் பெண்களுக்கு உரிமை அளிப்பதாக தெரிவித்தார். திமுக காங்கிரஸ் அரசு இங்குள்ள ஏழை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார். ராகுல் காந்தி நால்வரும் நரேந்திர மோடிக்கும் பாஜக விற்கும் எதிராக போராடி வருகிறார் என்றார். பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடி மக்களை பிளவுபடுத்துவதாகவும், தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக செயல்படுவதாகவும் கூறினார்.

Advertisement

தமிழகத்தை உருகுலைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம் என்றும், பாஜக ஆளுநர் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும் ஆனால் ராகுல் காந்தியை போலவே ஸ்டாலின் பாஜகவிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் என்றார்.

திமுக அரசு சார்பில் அளிக்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத்தொகை திமுக மீண்டும் ஜெயித்தால் 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

Advertisement

தமிழக மக்களை என்றும் சிந்திக்க முடியாது என்ற ராகுல் காந்தி பிரதமர் இடம் தெரிவித்ததாகவும் கூறினார். பெண்கள் உரிமைக்காக பிரதமர் மோடி எதுவும் செய்ததில்லை ஆனால் நேற்று இங்கு வந்த முடியாததை பற்றி பேசுகிறார் என்று விமர்சித்தார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2000 கோடி கல்வி நிதியை தர மறுப்பதாகவும், மெட்ரோ ரயில் திட்டங்களையும் சென்னையில் தாமதப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக மோடி அரசு மற்றும் அதிமுகவை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என்றும் அடுத்த இந்த ஆண்டுகளும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி ஸ்டாலின் ஆட்சி தொடரும் பொழுது தான் மகள் இருக்கும் பொது மக்களுக்கும் அவர்களது உரிமை மீட்டு தரப்படும் என தெரிவித்தார். எனவே சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதிக்கு கை சினத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...