பள்ளி, கல்லூரி பகுதிகளில் தீவிர கண்காணிப்பு; கோவையில் சிங்கப்பெண் படை களமிறக்கம்

கோவை: கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் கீழ் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் சென்னையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, இந்த திட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில், புறநகர் பகுதிக்காக ஒரு குழுவும், மாநகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்காக தலா ஒரு குழுவும் என மொத்தம் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு பெண் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) தலைமையில் இரண்டு பெண் காவலர்கள் பணியாற்ற உள்ளனர். இதற்காக 3 ரோந்து வாகனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பொது இடங்களிலும், இணைய வழியிலும் நடைபெறும் குற்றங்களை தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...