வானதி சீனிவாசன் கேள்விக்கு முதல்வரே திணறுவார்- எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம்…

கோவை: வானதி சீனிவாசன் கேள்விக்கு முதலமைச்சரே பதில் சொல்ல முடியாமல் திணறுவார் என வாக்கு சேகரித்தார் எஸ்.பி வேலுமணி.

Advertisement

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சாய்பாபா காலனி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது அவர் பேசுகையில் அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கட்சியினுடைய அனைத்து கட்சித் தலைவர்களுடைய நல்ல ஆதரவுகளுடன், இன்று வெற்றி வேட்பாளராக போட்டியிடக் கூடிய வானடி சீனிவாசன் எளிமையானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடியவர் என்றார்.

சட்டமன்றத்தில் தொகுதி மக்களுக்காக உரக்கச் சொல்லி, பல்வேறு திட்டங்களை பெற்று தருவதிலும், எந்த குறையாக இருந்தாலும் நிவர்த்தி செய்வதில்லும், மக்களோடு, மக்களாக இருந்து மக்களை சந்திப்பதிலும், இன்றைக்கு அகில இந்திய அளவில் பொறுப்பில் இருந்தால் கூட தொகுதி மக்கள் தான் எனக்கு முக்கியம், என்று தொகுதி மக்கள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க கூடிய வேட்பாளர் வானதி சீனிவாசன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் தாமரை சின்னத்திலே வாக்களிக்குமாறு பணிந்து கேட்டுக் கொள்வதாக கூறினார்.

Advertisement

வானதி சீனிவாசன் ஏற்கனவே தெற்கு தொகுதியில் பணியாற்றியவர், சட்டமன்றத்தில் அ.தி.மு.க வின் கொறடா தான் இருந்ததாகவும், வானதி சீனிவாசன் ஒவ்வொரு முறையும் பேசும்பொழுது எந்த அமைச்சரும் பதில் கூற முடியாது என்றும், முதலமைச்சர் கூட பதில் கூற முடியாது அந்த அளவிற்கு சரியான முறையில் பிரச்சினைகளை, மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை, மக்களோடு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்பார் என்றார்.

தி.மு.க செய்த சதிகளை, ஊழல்களை எடுத்துச் சொல்வார்கள், அது மட்டுமல்ல இன்றைக்கு தொகுதி மக்களிடம் ஒரு அன்பாக பழகக் கூடியவர், ஒரு பிரச்சனையும் வந்து விட்டால் எதுவாக இருந்தாலும் நேரடியாக எந்த நேரத்தில் அணுகக் கூடியவர், உடனடியாக அந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்கக் கூடிய ஒரு அற்புதமான வேட்பாளர் என்றால் அவர் தான் என்றார்.

Advertisement

மத்திய அரசிடம் இருந்து நமக்கு திட்டங்கள் வர வேண்டும், அதற்கு உங்களுடைய, வானதி சீனிவாசனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...